டிராக்டர் டீசல் டேங்க் வெடித்து படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு


டிராக்டர் டீசல் டேங்க் வெடித்து படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி சாவு
x
தினத்தந்தி 20 April 2019 4:00 AM IST (Updated: 19 April 2019 11:49 PM IST)
t-max-icont-min-icon

டிராக்டர் டீசல் டேங்க் வெடித்து படுகாயம் அடைந்த விவசாயி சிகிச்சை பலனின்றி இறந்தார்.

கொடுமுடி, 

கொடுமுடி அருகே உள்ள இச்சிப்பாளையம் பெருமாள்கோவில் புதூரை சேர்ந்தவர் சுந்தரம் (வயது 55). விவசாயி. இவருடைய மனைவி புவனேஷ்வரி (50), மகன் சிவப்பிரகாசம் (26).

இந்த நிலையில் சுந்தரம் கடந்த 16-ந் தேதி தன்னுடைய தோட்டத்தில் டிராக்டரில் உழவு ஓட்டிக்கொண்டு இருந்தார். அப்போது பேட்டரியில் மின்கசிவு ஏற்பட்டு டீசல் டேங்கில் தீப்பற்றியது. சில நொடியில் டேங்க் ‘டமார்‘ என்று வெடித்தது.

இதில் சுந்தரத்தின் உடலிலும் தீப்பற்றியது. அவருடைய வயிறு, கால்களில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. உடனே அவர் மீட்கப்பட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள். எனினும் சிகிச்சை பலன் அளிக்காமல் சுந்தரம் நேற்று அதிகாலை இறந்தார்.

இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story