திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவிப்பு


திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவிப்பு
x
தினத்தந்தி 20 April 2019 3:00 AM IST (Updated: 20 April 2019 12:33 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூரில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு தினத்தையொட்டி அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

6-ம் ஆண்டு நினைவு தினம்

‘தினத்தந்தி’ அதிபர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 6-ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு ஆதித்தனார் கல்வி நிறுவனம் சார்பில், மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவரும் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில், ஆதித்தனார் கல்வி நிறுவன மேலாளர் வெங்கட்ராமராஜன், கல்வி நிறுவன செயலாளர் சுப்பிரமணியம், கல்லூரி முதல்வர்கள் மகேந்திரன் (ஆதித்தனார் கல்லூரி), ஜெயந்தி (கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி), ஒய்ஸ்லின் ஜிஜி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி), சுவாமிதாஸ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி), பெவின்சன் பேரின்பராஜ் (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி), மரியசெசிலி (டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்), கலைக்குரு செல்வி (பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி) மற்றும் பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும், ஆதித்தனார் கல்வி நிறுவனத்திற்கு உட்பட்ட அனைத்து கல்லூரிகளிலும் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் திருவுருவ படம் அலங்கரித்து வைக்கப்பட்டு, கல்லூரி முதல்வர்கள் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

வணிகர் சங்கங்கள்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு காயாமொழி ஊர் மக்கள் சார்பில், காயாமொழி முப்புராதி அம்மன் கோவில் அக்தார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், காயாமொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், ஜெயக்குமார் ஆதித்தன், ஜவகர் சொக்கலிங்க ஆதித்தன், ஹெட்கேலார் ஆதித்தன் உள்ளிட்டவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தெற்கு மாவட்ட தலைவர் காமராசு, திருச்செந்தூர் வட்டார நாடார் வியாபாரிகள் சங்க செயலாளர் செல்வகுமார், துணை தலைவர் அழகேசன், நிர்வாகிகள் பாலமுருகன், தனசேகரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு, திருச்செந்தூர் வட்டார தலைவர் சற்குரு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். காமராஜர் ஆதித்தனார் கழகத்தின் சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட செயலாளர் ஐஜின், மாவட்ட மாணவரணி செயலாளர் சரவணன், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலாளர் டேனி ஜெபஸ்டீன், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மகேஷ், நகர செயலாளர் ராஜேஷ், உடன்குடி நகர செயலாளர் ஜெபராஜ், சகாயராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பனங்காட்டு மக்கள் கழகம் சார்பில், டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், தென்மண்டல செயலாளர் சொர்ணவேல்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், வடக்கு மாவட்ட செயலாளர் அற்புதராஜ், வக்கீல் பிரிவு பொறுப்பாளர் சிலுவை நாடார், நகர செயலாளர் துரை நாடார், முத்தையாபுரம் பொறுப்பாளர் அஸ்வின் நாடார், பாலா, அசோக், ஜெகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காயாமொழி

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நற்பணி மன்றம் சார்பில், காயாமொழியில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில், நற்பணி மன்ற பொருளாளர் ராஜேந்திர ஆதித்தன், செயலாளர் மொகதும், காயாமொழி முப்புராதி அம்மன் கோவில் அக்தார்கள் பாலசுப்பிரமணிய ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், காயா மொழி கூட்டுறவு சங்க தலைவர் தங்கேச ஆதித்தன், வரதராஜ ஆதித்தன், பகவதி ஆதித்தன், சின்னத்துரை ஆகியோர் கலந்து கொண்டனர்.

திருச்செந்தூர் சன்னதி தெருவில், ஸ்ரீலஸ்ரீ பூமணி சுவாமிகள் லலிதா பூமணி அம்மையார் அறக்கட்டளை சார்பில் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. விழாவில், முன்னாள் தலைமை ஆசிரியர் ராஜபாண்டியன், அறக்கட்டளை தலைவர் சண்முகவேல், இந்து முன்னணி நகர பொது செயலாளர் முத்துராஜ், செந்தில்பாண்டி, கள்ளாண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story