பல்லாவரம் அருகே இரும்பு கம்பியால் அடித்து வியாபாரி கொலை 7 பேர் கைது
பல்லாவரம் அருகே இரும்பு கம்பியால் அடித்து வியாபாரி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தாம்பரம்,
சென்னை பல்லாவரத்தை அடுத்த பம்மல் கல்கேணி ஆதம் நகரை சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 48). இவருக்கு திருமணமாகி லட்சுமி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். சீனிவாசன், திருநீர்மலை சாலை நாகல்கேணியில் டாஸ்மாக் கடை அருகே பன்றி இறைச்சி பகோடா கடை நடத்தி வந்தார். கடந்த 3 நாட்களாக மனநிலை பாதிக்கப்பட்டவர் போல சீனிவாசன் அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு போதையில் ஆதம் நகர் வழியாக சென்றவர்களை இரும்புகம்பியால் விரட்டியதாகவும், அப்போது இருசக்கரவாகனத்தில் சென்ற குரோம்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்த விஜய் மற்றும் பார்த்திபனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து விஜய் மற்றும் பார்த்திபன் வாகனத்தை நிறுத்தி விட்டு சீனிவாசனிடம் தகராறு செய்தனர். பின்னர் செல்போன் மூலம் நண்பர்களை வரவைத்து, 8 பேர் சேர்ந்து அப்துல் கலாம் தெருவில் இருந்த சீனிவாசனை மடக்கி, இரும்புகம்பியை பிடுங்கினர். பின்னர் அவரை இரும்புகம்பியால் அடித்தனர்.
இதில் ரத்தவெள்ளத்தில் சீனிவாசன் விழுந்து கிடந்தார். உடனே அந்த கும்பல் தப்பி சென்று விட்டது. அக்கம்பக்கத்தினர் சீனிவாசனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்தார். தகவல் அறிந்த சங்கர் நகர் போலீசார் உடலை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜய் (24), பார்த்திபன் (24), மற்றொரு விஜய்(24), ஆனந்த் (24), டில்லிபாபு (24), கண்ணன் (24), சூர்யா (24) ஆகிய 7 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கரண் என்பவரை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story