ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனை

ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
ஓட்டப்பிடாரம்,
ஓட்டப்பிடாரம் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இடைத்தேர்தல்
தமிழகத்தில் ஓட்டப்பிடாரம் (தனி), திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ந்தேதி நடக்க உள்ளது. இதில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக வக்கீல் சண்முகையா போட்டியிடுகிறார். அ.தி.மு.க. சார்பில் வேட்பாளரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் அமைதியான முறையில் நடக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் கமிஷன் செய்து வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. அந்த பறக்கும் படையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வாகன சோதனை
ஓட்டப்பிடாரம் மெயின் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படை தாசில்தார் நடராஜன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெஞ்சமின் மற்றும் குழுவினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களிலும் சோதனை நடத்தினர்.
இதேபோல், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே, இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story






