கும்மிடிப்பூண்டி, பூந்தோப்பில் பால்குட ஊர்வலம்


கும்மிடிப்பூண்டி, பூந்தோப்பில் பால்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 21 April 2019 3:15 AM IST (Updated: 21 April 2019 1:13 AM IST)
t-max-icont-min-icon

கன்னியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கன்னியம்மனை வழிபட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி ரெயில்வே மேம்பாலம் அருகே உள்ள கன்னியம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமியையொட்டி பால் அபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் நிர்வாகி மோகன்ராஜ் தலைமையில் கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள முருகன் கோவிலில் இருந்து பால்குடங்களை எடுத்துக்கொண்டு பக்தர்கள் ஊர்வலமாக கன்னியம்மன் கோவிலுக்கு வந்தனர். பின்னர் கன்னியம்மனுக்கு பாலாபிஷேகம், அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கன்னியம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

ஊத்துக்கோட்டை பேரூராட்சிக்கு உள்பட்ட பூந்தோப்பு பகுதியில் புகழ்பெற்ற சப்த கன்னியர் கோவில் உள்ளது. இங்கு சித்ரா பவுர்ணமியையொட்டி பால்குட அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. ரெட்டித்தெருவில் உள்ள எல்லையம்மன் கோவிலில் இருந்து பால்குடங்களுடன் பக்தர்கள் ஊர்வலமாக சப்த கன்னியர் கோவிலை வந்தடைந்தனர். சிறப்பு பூஜைகள் நடத்திய பின்னர் சப்த கன்னியருக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Next Story