கிருஷ்ணகிரி அருகே திருமண ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீது வழக்கு


கிருஷ்ணகிரி அருகே திருமண ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை ராணுவ வீரர் உள்பட 5 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 22 April 2019 4:30 AM IST (Updated: 21 April 2019 9:57 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே திருமண ஆசைவார்த்தை கூறி கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராணுவ வீரர் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த மேலும் 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி,

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி அருகே உள்ள பூவத்தி கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் கிருஷ்ணகிரி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார். ஆலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் காந்தி (வயது 25). ராணுவத்தில் வீரராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் உறவினர்கள் ஆவார் கள்.

இந்த நிலையில் காந்தி திருமணம் செய்வது கொள்வதாக கல்லூரி மாணவியிடம் ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. மேலும் காந்தி, மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் 2 பேரும் தனிமையில் இருந்துள்ளனர். தற்போது அந்த மாணவியை திருமணம் செய்ய காந்தி மறுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் ராணுவ வீரர் காந்தி, உடந்தையாக இருந்ததாக அவரது தாயார் முனியம்மாள், உறவினர்கள் சுமதி, முருகன், முனிராஜ் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story