மாவட்ட செய்திகள்

ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி 5 இடங்களில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு + "||" + Road Traffic Traffic Damages in 5 Places to Enforce Audio Publishers

ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி 5 இடங்களில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு

ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தி 5 இடங்களில் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
அவதூறாக பேசியதாக ஆடியோ வெளியிட்டவர்களை கைது செய்யவலியுறுத்தி புதுக்கோட்டை மாவட்டத்தில் 5 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கறம்பக்குடி,

ஒரு சமூகத்தை சேர்ந்த பெண்களை அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட 2 பேரையும் கைது செய்ய வலியுறுத்தி நேற்று புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள மருதன்கோன்விடுதி 4 ரோட்டில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் மோகன்தாஸ், நாகராஜ் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கறம்பக்குடி-தஞ்சாவூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


இதேபோல அறந்தாங்கி அருகே உள்ள ராஜேந்திரபுரத்தில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்று. இது குறித்து தகவல் அறிந்த அறந்தாங்கி துணை போலீஸ் சூப்பிரண்டு கோகிலா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதேபோல அறந்தாங்கி அருகே உள்ள வடுகாடு, மேலப்பெருங்காடு ஆகிய 2 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். இதனால் அறந்தாங்கி-நாகுடி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. ஆவுடையார்கோவில் அருகே உள்ள பரமந்தூரில் சாலை மறியல் நடைபெற்றது. இது குறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் சுமார் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. குமரி போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட வந்த கேரள ஆட்டோ டிரைவர்கள்
குமரி மாவட்டத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தை முற்றுகையிட வந்த கேரள ஆட்டோ டிரைவர்கள் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டனர். மேலும் இரு மாநில போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. சீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி போக்குவரத்து மாற்றம்
சீர்காழியில் ரூ.22 லட்சத்தில் சிறுபாலங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
3. வெண்ணந்தூர் அருகே கனமழையால் தரைப்பாலம் உடைந்தது 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
கனமழை காரணமாக வெண்ணந்தூர் அருகே தரைப்பாலம் உடைந்தது. இதனால் 4 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
4. தர்மபுரி மாவட்டத்தில் கனமழை: வத்தல்மலை அடிவாரத்தில் தடுப்பணை உடைந்தது 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வத்தல்மலை அடிவாரத்தில் உள்ள தடுப்பணை உடைந்ததால் 7 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
5. பயணிகளின் கோரிக்கையை ஏற்று நிழற்குடையை தூய்மை செய்த போக்குவரத்து போலீசார்
பயணிகளின் கோரிக்கையை ஏற்று நிழற்குடையை தூய்மை செய்து பஸ்கள் நின்று செல்ல போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...