சாலை மறியலில் ஈடுபட்ட 402 பேர் மீது வழக்குப்பதிவு


சாலை மறியலில் ஈடுபட்ட 402 பேர் மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 22 April 2019 3:45 AM IST (Updated: 22 April 2019 1:49 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட 402 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

தஞ்சாவூர் நாடாளுமன்ற தொகுதியின் சுயேச்சை வேட்பாளரான செல்வராஜையும், அவர் சார்ந்த சமூகத்தையும் 2 பேர் அவதூறாக பேசும் ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இந்த ஆடியோவில் உள்ள 2 பேரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி கடந்த 19-ந் தேதி பொன்னமராவதியில் பயங்கர கலவரம் நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து இலுப்பூர், அன்னவாசல், கந்தர்வகோட்டை, கறம்பக்குடி, அறந்தாங்கி, உடையாளிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து விராலிமலை செக்போஸ்டில் சாலை மறியலில் ஈடுபட்ட 70 பேர் மீது விராலிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல அன்னவாசலில் 6 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 130 பேர் மீது அன்னவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இலுப்பூரில் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 77 பேர் மீது இலுப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதேபோல உடையாளிப்பட்டி பகுதியில் 2 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 88 பேர் மீது, உடையாளிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதேபோல ஆலங்குடி பகுதியில் 3 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டதாக 17 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கறம்பக்குடி அருகே உள்ள ரெகுநாதபுரம் சாலை மறியலில் ஈடுபட்டதாக 20 பேர் மீது ரெகுநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

Next Story