இளையான்குடியில் மழை, வீடு இடிந்து விழுந்தது


இளையான்குடியில் மழை, வீடு இடிந்து விழுந்தது
x
தினத்தந்தி 22 April 2019 3:30 AM IST (Updated: 22 April 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

இனையான்குடியில் திடீர் என கன மழை பெய்தது. அதில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில், அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன.

இளையான்குடி,

நாளுக்குநாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2 தினங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசானது முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இளையான்குடி அருகே உள்ள மேலாயூர் கிராம ஊராட்சியில் உள்ளது தொண்டையூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் ராக்கு (வயது 60). இவர் குடும்பத்துடன் ஓட்டு வீட்டில் வசித்து வருகிறார்.

இந்தநிலையில் நேற்று காலை இளையான்குடியில் திடீரென மழை பெய்தது. சுமார் ½ மணி நேரம் பெய்த கனமழையால் கிராமங்களில் உள்ள தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக ராக்குவின் வீட்டின் ஒரு பகுதியில் மழைநீர் தேங்கி நின்றதால், அவர் வீட்டின் ஒரு பக்க சுவர் மண்அரிப்பு ஏற்பட்டு திடீரென இடிந்து விழுந்தது.

அதில் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. வீட்டின் மேற்கூரையும் இடிந்து விழுந்ததால் வீடு முற்றிலும் சேதமடைந்தது. மேலும் இடிந்து விழுந்த சுவர் அருகில் இருந்த ஆனந்தகுமரேசன் என்பவரது வீட்டின் மீது விழுந்ததில், அவரின் வீட்டு சுவர் சேதமடைந்தது. வீட்டில் யாரும் இல்லாத நிலையில், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

ஆனால் வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த 2 மோட்டார்சைக்கிள்கள் பலத்த சேதமடைந்தன. வீட்டை இழந்த ராக்கு நிவாரண உதவி மற்றும் அரசு வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் தனக்கு வீடு கட்ட மாவட்ட நிர்வாகம் உதவி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

Next Story