குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு


குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக்குடங்களுடன் திரண்டு வந்த பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
x
தினத்தந்தி 23 April 2019 4:00 AM IST (Updated: 23 April 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி காலிக் குடங்களுடன் திரண்டு வந்த பெண்களால் நேற்று நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல்,

பரமத்திவேலூர் தாலுகா செருக்கலை பகுதியை சேர்ந்த பெண்கள் நேற்று காலிக்குடங் களுடன் நாமக்கல் கலெக்டர் அலுவலகம் திரண்டு வந்து, மனுக்கள் போடும் பெட்டியில் கோரிக்கை மனு ஒன்றை போட்டனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

செருக்கலை கிராமத்தில் 300 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் கிராமத்தில் 2 ஆழ்துளை கிணறுகள் உள்ளன. இதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. ஆனால் கடந்த 3 மாதகாலமாக ஒரு ஆழ்துளை கிணற்றில் மின்சார மோட்டார் பழுதாகி விட்டது.

இதனால் அருந்ததியர் காலனி பகுதிக்கு முறையாக குடிநீர் கிடைப்பது இல்லை. 2 நாட்களுக்கு ஒருமுறை மிகவும் குறைவான அளவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் ஒரு குடம் குடிநீரை ரூ.7 கொடுத்து வாங்கி பயன்படுத்தி வருகிறோம். எனவே எங்கள் பகுதியில் நிலவும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்ததால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story