மோதலில் சேதமடைந்த வீடுகளை சீரமைக்கும் பணி தீவிரம்
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18-ந் தேதி தேர்தலின்போது இரு கூட்டணி கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது.
செந்துறை,
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் கடந்த 18-ந் தேதி தேர்தலின்போது இரு கூட்டணி கட்சியினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு பகுதியில் உள்ள வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன. அதனை தொடர்ந்து நேற்று மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமையில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையை தொடர்ந்து நேற்று ஊரக வளர்ச்சி துறையினர் சேதமடைந்த 42 வீடுகளிலும் உள்ள உடைந்த ஓடுகளுக்கு பதிலாக புதிய ஓடுகளை வாங்கி வந்தனர். பின்னர் உள்ளாட்சி துறையை சார்ந்த பணியாளர்கள் மூலம் சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து பொன்பரப்பி கிராமத்தில் எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாமல் இருக்கும் வகையில் அரியலூர் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் 70 போலீசார் ஆங்காங்கே தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இந்த பகுதியில் அமைதியான சூழ்நிலை நிலவி வருகிறது.

Related Tags :
Next Story