கயத்தாறு அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு


கயத்தாறு அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த டிரைவர் சாவு
x
தினத்தந்தி 22 April 2019 10:00 PM GMT (Updated: 22 April 2019 8:26 PM GMT)

கயத்தாறு அருகே பனை மரத்தில் இருந்து தவறி விழுந்த ஆம்னி பஸ் டிரைவர் பரிதாபமாக இறந்தார்.

கயத்தாறு,

கயத்தாறு அருகே சன்னது புதுக்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 49). இவர் நெல்லையில் உள்ள தனியார் ஆம்னி பஸ்சில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது ஊரில் உள்ள வயலில் நின்ற பனை மரத்தில் ஏறி, நுங்கு வெட்ட முயன்றார். அப்போது மழை பெய்து ஈரமாக இருந்ததால், சரவணன் பனையில் இருந்து கை நழுவி தவறி கீழே விழுந்தார்.

இதில் பலத்த காயம் அடைந்த அவரை உறவினர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின்பேரில், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சரவணனுக்கு பேச்சியம்மாள் என்ற மனைவியும், கவிதா, சரண்யா, நாகம்மாள், சண்முகத்தாய் ஆகிய 4 மகள்களும், மணிகண்டன், வேம்புராஜ் ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

Next Story