குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு அதிகபட்சமாக திற்பரப்பில் 47 மி.மீ. பதிவு


குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு அதிகபட்சமாக திற்பரப்பில் 47 மி.மீ. பதிவு
x
தினத்தந்தி 22 April 2019 10:45 PM GMT (Updated: 22 April 2019 9:26 PM GMT)

குமரி மாவட்டத்தில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. அதிகபட்சமாக திற்பரப்பில் 47 மி.மீ. பதிவாகியது.

நாகர்கோவில்,

கன்னியாகுமரி முதல் லட்சத்தீவு வரையிலான வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இதே போல குமரி மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக மழை பெய்கிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதிகளான குலசேகரம், மார்த்தாண்டம், தக்கலை உள்ளிட்ட பகுதிகளில் நேற்றும் மழை பெய்தது. குறிப்பாக குலசேகரத்தில் பலத்த மழையாக பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. நாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வானில் கருமேகங்கள் திரண்டு மழைக்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால் மாலை வரை மழை பெய்யவில்லை.

மழை அளவு

குமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி வரையுள்ள நிலவரப்படி அதிகபட்சமாக திற்பரப்பில் 47 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதே போல பேச்சிப்பாறை- 24.2, பெருஞ்சாணி-5.4, சிற்றார் 1-21, சிற்றார் 2-27, அடையாமடை-7, புத்தன் அணை-5, குழித்துறை-23.2, களியல்-18.2, சுருளோடு-13.4, பாலமோர்-12.6 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது. மழை நீடித்து பெய்து வருவதால் குமரி மாவட்டத்தில் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருகிறது.

Next Story