கன்னிமாரா நூலகத்தில் கண்காட்சி: 500 ஆண்டுகள் பழமையான புத்தகங்களை கண்டு ரசித்த பொதுமக்கள்
சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் புத்தகங்கள் கண்காட்சி தொடங்கியது.
சென்னை,
உலக புகழ்பெற்ற நாடக ஆசிரியரான ஷேக்ஸ்பியரின் பிறந்த நாளான ஏப்ரல் 23-ந்தேதி உலக புத்தக தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், உலக புத்தக தினத்தையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள கன்னிமாரா பொது நூலகத்தில் உள்ள பழைய கட்டிடத்தில் 500 ஆண்டுகள் பழமையான மற்றும் அபூர்வமான புத்தகங்கள் கண்காட்சி நேற்று தொடங்கியது.
இந்த கண்காட்சியை பள்ளி, கல்லூரி மாணவர்கள், பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பார்வையிட்டனர். கண்காட்சியில் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்கள், தமிழ் இலக்கியங்கள், ஆண்டுத் தகவல் நூல்கள், அரிய நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன. முதன்முறையாக உலக மொழிகளான ஜெர்மன், பிரெஞ்சு, டச்சு, செக் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகள் அடங்கிய நூல்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.
இதுதவிர 85 சென்டி மீட்டர் நீளமும், 60 சென்டி மீட்டர் அகலமும் கொண்ட ஆசியாவிலேயே மிகப்பெரிய புத்தகமான இந்தியா- ஆசியா வரைபடங்கள் மற்றும் ஓவிய புத்தகம் வாசகர்களை கவர்ந்தது.
இந்த கண்காட்சியை வரும் 27-ந்தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்படுகின்றனர்.
Related Tags :
Next Story