வாகனத்தை கழுவியபோது பரிதாபம் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


வாகனத்தை கழுவியபோது பரிதாபம் மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 24 April 2019 3:30 AM IST (Updated: 24 April 2019 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வாகனத்தை கழுவியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் (வயது25). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர்– மதுரை தேசிய நெடுஞ்சாலையில் செயல்படும் இரு சக்கரவாகன நிறுவனத்தில் இரு சக்கர வாகனத்துக்கு வாட்டர் சர்வீஸ் செய்யம் பணி புரிந்து வந்தார். இவர் வழக்கம் போல மோட்டாரை இயக்கி தண்ணீரால் வாகனத்தை கழுவும் பணியில் ஈடுபட்டு இருந்தபோது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலயே உயிரிழந்தார். நகர் போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story