உள்ளாட்சி வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடு: கருத்துக்கள் தெரிவிக்க மே 2-ந் தேதி கடைசி நாள் கலெக்டர் பிரபாகர் தகவல்


உள்ளாட்சி வாக்குச்சாவடி வரைவு பட்டியல் வெளியீடு: கருத்துக்கள் தெரிவிக்க மே 2-ந் தேதி கடைசி நாள் கலெக்டர் பிரபாகர் தகவல்
x
தினத்தந்தி 25 April 2019 4:30 AM IST (Updated: 25 April 2019 12:53 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ளாட்சி வாக்குச்சாவடி வரைவு பட்டியில் வெளியீடு தொடர்பாக கருத்துக்களை தெரிவிக்க மே 2-ந் தேதி கடைசிநாள் என்று மாவட்ட கலெக்டர் பிரபாகர் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளபடி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வாக்குச்சாவடிகள் வரைவு பட்டியல்கள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வாக்குச்சாவடி வரைவு பட்டியல்கள் மாவட்ட கலெக்டர்கள் அலுவலகம், மாவட்ட ஊராட்சி அலுவலகம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டு உள்ளது.

மேலும் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிராம ஊராட்சி அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளது. அதே போல், நகராட்சி மற்றும் பேரூராட்சி அலுவலகங்களிலும், ஒவ்வொரு வார்டிலும் தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வாக்குச்சாவடி வரைவு பட்டியல்கள் வைக்கப் பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் மாவட்ட பிரதிநிதிகள் தங்களது கருத்துக்கள் அல்லது மறுப் புரைகளை தெரிவிக்க விரும்பும்பட்சத்தில், அதனை சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமோ அல்லது மாவட்ட தேர்தல் அலுவலரிடமோ வருகிற மே மாதம் 2-ந் தேதிக்குள் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story