மாவட்டத்தில் 3 நாட்களில் 1,292 மி.மீட்டர் மழை பதிவு பொதுமக்கள் மகிழ்ச்சி
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 1,292 மி.மீட்டர் மழைபதிவாகி உள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
நாமக்கல்,
தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்்தில் அமைந்துள்ள வானிலை ஆலோசனை மையம் நாமக்கல் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும், விவசாயிகள் பயன் அடையும் பொருட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட காலநிலை மேலாளர்களுக்கு மழை மானியை கொடுத்து மழையை அளவிட்டு வருகின்றது. அந்த வகையில் கடந்த 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு வட்டாரங்களில் பெய்த மொத்த மழை அளவு அளவிடப்பட்டு உள்ளது.
அதன்படி கடந்த 3 நாட்களில் வட்டாரம் வாரியாக பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:- பள்ளிபாளையம்- 20, திருச்செங்கோடு-120, கபிலர்மலை-198, பரமத்தி-117, எலச்சிபாளையம்-85, மல்லசமுத்திரம் -69, ராசிபுரம்-27, புதுச்சத்திரம்-186, நாமக்கல்-48, மோகனூர்-76, எருமப்பட்டி-98, சேந்தமங்கலம்-16, கொல்லிமலை-102, நாமகிரிப்பேட்டை-65, வெண்ணந்தூர்-65.
மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் 1,292 மி.மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 86 மி.மீட்டர் மழை பெய்து உள்ளது. விவசாயிகள் இந்த மழை அளவிற்கு ஏற்ப தங்களுடைய நிலங்களை கோடை வேளாண்மைக்கு தயார்படுத்திக்கொள்ளுமாறு வானிலை ஆலோசனை மையம் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கோடைமழை காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story