கெட்டுப்போன மீன் விற்பனை புகார்: சுகாதாரத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
கெட்டுப்போன மீன் விற்கப்படுவதாக புகார் எழுந்ததை தொடர்ந்து அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள்.
சிவகாசி,
சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆனையூரில் 30-க்கும் மேற்பட்ட மீன்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கெட்டுப்போன மீன்களை ஐஸ் பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் வந்தது. அதன் பேரில் துணை இயக்குனர் கணேஷ் உத்தரவின் பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேற்று காலை ஆனையூர் பகுதியில் உள்ள மீன்கடை மற்றும் இறைச்சி கடைகளில் திடீர் சோதனை செய்தனர்.
இதில் கெட்டுப்போன மீன் வைத்திருந்த ஒரு மீன் வியாபாரியை அதிகாரிகள் எச்சரித்து அந்த மீனை அழிக்க உத்தரவிட்டனர். மேலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 700 அபராதம் வசூலிக்கப்பட்டது. மேலும் ரூ.2000 மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.
மேலும் கோவில்கள் அருகில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த கடைக்காரர்களுக்கு தலா ரூ.200 என 5 கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் சுகாதாரத்துறை அதிகாரிகள் சீனிவாசன், ஆனையூர் பஞ்சாயத்து செயலாளர் நாகராஜன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜெயச்சந்திரன், ஆய்வாளர்கள் அழகுமுத்துபாண்டி, சேவுகப்பாண்டி, ராதாகிருஷ்ணன், விக்னேஷ், வினோத் குமார் ஆகியோர் ஈடுபட்டனர்.

Related Tags :
Next Story