தூத்துக்குடி அருகே தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்


தூத்துக்குடி அருகே தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 25 April 2019 10:15 PM GMT (Updated: 25 April 2019 8:15 PM GMT)

தூத்துக்குடி அருகே தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி அருகே உள்ள மறவன்மடத்தில் உள்ள தனியார் ஓட்டலில் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. வேட்பாளர் சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் தொகுதி பொறுப்பாளர் கே.என்.நேரு எம்.எல்.ஏ. பேசும் போது, ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெறுவதற்கு கடினமாக உழைக்க வேண்டும். வேட்பாளர் சண்முகையாவை சுமார் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினிடம் வெற்றிக்கனியை சமர்ப்பிக்க வேண்டும். அதற்காக அனைவரும் பாடுபடவேண்டும் என்று கூறினார்.

கூட்டத்தில் முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர்கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ, எம்.எல்.ஏ.க்கள் ஆஸ்டின், சுப்பிரமணியன், மைதீன்கான், சுரேஷ்ராஜன், மாநில செய்தி தொடர்பாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமிபாண்டியன், நெல்லை புறநகர் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன், மாநகர் மாவட்ட செயலாளர் அப்துல்வகாப், தூத்துக்குடி தெற்கு மாவட்ட ம.தி.மு.க. செயலாளர் புதுக்கோட்டை செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story