நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு குற்றவாளி சாவு
நாக்பூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மும்பை தொடர் குண்டு வெடிப்பு குற்றவாளி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார்.
நாக்பூர்,
மும்பையில் கடந்த 1993-ம் ஆண்டு நடந்த தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் 257 பேர் உயிரிழந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு திட்டம் தீட்டியதாக கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டவர் அப்துல் கானி துர்க்(வயது 68).
பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
கைதி சாவு
இந்தநிலையில் கடந்த 2012-ம் ஆண்டு முதல் அவர் நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்தநிலையில் அவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 22-ந் தேதி அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
Related Tags :
Next Story