திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி - சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் மாவட்டத்தில் சம்பா அறுவடை பணிகள் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து விவசாயிகள் பருத்தி, உளுந்து, பச்சை பயிறு சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நிலத்தடி நீரை பயன்படுத்தி கோடை நெல் சாகுபடியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். சம்பா சாகுபடியில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், மாவட்டத்தில் உள்ள அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவைக்காக ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பின்னர் அரிசி மூட்டைகள் சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு, பொதுவினியோக திட்டத்திற்காக பல மாவட்டங்களுக்கு சரக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி திருவாரூரில் இருந்து திருவள்ளூருக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் பொதுரக புழுங்கல் அரிசி சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. இதையொட்டி திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து அரிசி மூட்டைகள் லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 21 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் அரிசி மூட்டைகளுடன் திருவள்ளூருக்கு புறப்பட்டு சென்றது.
Related Tags :
Next Story