கூட்டுறவு வங்கி ஊழியர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை போலீசில் மகன் புகார்
கூட்டுறவு வங்கி ஊழியர் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவருடைய மகன் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.
திருவாரூர்,
திருவாரூர் அருகே பழையவலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் அய்யாபிள்ளை (வயது 56). இவர் சோழங்கநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி அய்யாபிள்ளை பூச்சி மருந்தை (விஷம்) குடித்து திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிசிக்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில் அய்யாபிள்ளை மகன் தமிழ்அன்பன் வைப்பூர் போலீசில் புகார் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் அருகே பழையவலம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். இந்நிலையில் எனது தந்தை அய்யாபிள்ளை சோழங்க நல்லூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் செயலாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த 2 மாதங்களாக தந்தை கவலையுடன் இருந்து வந்தார்.
நடவடிக்கை
எனது தந்தை அய்யாபிள்ளை கடந்த 19-ந் தேதி விஷம் குடித்து விட்டார். இதனால் அவர் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்த எனது தந்தையின் சட்டை பையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் என் மீது பணம் கையாடல் செய்ததாக வீண் பழி சுமத்தி, எனது சாவுக்கு காரணமாக இருந்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எழுதி வைத்திருந்தார். எனவே எனது தந்தை சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story