வலங்கைமான் அருகே செங்கல் சூளை தொழிலாளி அடித்துக்கொலை
வலங்கைமான் அருகே செங்கல் சூளை தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சக தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வலங்கைமான்,
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள நல்லூர் கிராமத்தில் செங்கல் சூளைகள் உள்ளன. இதில் ஒரு செங்கல் சூளையில் தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே உள்ள துரும்பூர் வீராஞ்சேரி அம்பேத்கர் நகரை சேர்ந்த சிவபுண்ணியம்(வயது 40) என்பவர் கொட்டகை அமைத்து தனது குடும்பத்துடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
இதேபோல சுவாமிமலை அருகே உள்ள திருமண்டங்குடியை சேர்ந்த சதீஷ்(38) என்பவரும் தனது குடும்பத்துடன் இதே செங்கல் சூளையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
கைது
சிவபுண்ணியம் மற்றும் சதீசின் கொட்டகைகள் அருகருகே உள்ளதால் அவர்கள் இருவர் குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. சம்பவத்தன்று இவர்கள், இருவர் குடும்பத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ், செங்கல் சூளை அடுப்புக்கு பயன்படுத்தப்படும் விறகு கட்டையை எடுத்து சிவபுண்ணியத்தை தாக்கியதாக கூறப்படுகிறது.
தாக்குதலில் படுகாயம் அடைந்த சிவபுண்ணியத்தை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிவபுண்ணியம் உயிரிழந்தார்.
இது குறித்து வலங்கைமான் போலீசார், கொலை வழக்குப்பதிவு செய்து சதீசை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story