நாகையில் கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் 1-ந் தேதி தொடங்குகிறது
நாகையில் கோடை கால கிரிக்கெட் பயிற்சி முகாம் வருகிற 1-ந்தேதி தொடங்குகிறது.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் ஜூலியஸ் விஜயகுமார் செய்திக்குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:-
நாகை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் அடுத்த மாதம் (மே) 1-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை கோடைகால கிரிக்கெட் பயிற்சி முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் 19 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் கலந்துகொள்ளலாம். இந்த முகாமில் கலந்துகொள்ள விரும்புவோர் நாகை மாவட்டத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
பயிற்சி முகாம் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கம், வலிவலம் தேசிகர் பாலிடெக்னிக் மைதானம் ஆகியவற்றில் நடைபெறும். இந்த பயிற்சி முகாமிற்கு 60 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான தேர்வு வருகிற 30-ந் தேதி (செவ்வாய்க் கிழமை) மாலை 3 மணியளவில் நாகை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பயிற்சியாளர் குமாரசாமி பயிற்சி அளிக்க உள்ளார். மேலும் இதுகுறித்த விவரங்களை 99947-86217 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story