தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை விற்றால் கடைகளின் உரிமம் ரத்து நகராட்சி ஆணையர் எச்சரிக்கை


தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை விற்றால் கடைகளின் உரிமம் ரத்து நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 April 2019 4:15 AM IST (Updated: 28 April 2019 12:48 AM IST)
t-max-icont-min-icon

தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை விற்றால் கடைகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று, பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பட்டுக்கோட்டை,

பட்டுக்கோட்டை நகரில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள், பொருட்கள் விற்கப்படுவதாக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை, நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குனர் உமாமகேஸ்வரி ஆகியோரின் உத்தரவின்படி பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் என்.பாஸ்கர் தலைமையில் நகராட்சி துப்புரவு அலுவலர் அந்தோணி ஸ்டீபன், துப்புரவு ஆய்வாளர்கள் ரவிச்சந்திரன், ஆரோக்கியசாமி மற்றும் பணியாளர்கள் பட்டுக்கோட்டை நகரில் உள்ள கடைகளில் அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள் விற்கப்படுகிறதா? என சோதனை நடத்தினர்.

பறிமுதல்

சோதனையின் போது பட்டுக்கோட்டை சின்னையாதெரு, பெரிய தெரு ஆகிய பகுதிகளில் உள்ள 2 கடைகளில் இருந்து 55 கிலோ எடையிலான தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 2 கடை உரிமையாளர்களுக்கு ரூ.5,500 அபராதம் விதிக்கப்பட்டது. இது குறித்து பட்டுக்கோட்டை நகராட்சி ஆணையர் பாஸ்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தடை செய்யப்பட்ட பாலித்தீன் பொருட்களை பயன்படுத்துவது, விற்பனை செய்வது, இருப்பு வைப்பது தண்டனைக்குரிய குற்றம். மீறினால் அரசால் நிர்ணயிக்கப்பட்ட அபராதம் விதிக்கப்படுவதுடன் கடை உரிமம் ரத்து செய்யப்படும்“ இவ்வாறு அவர் கூறினார்.

Next Story