திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு


திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 27 April 2019 10:15 PM GMT (Updated: 27 April 2019 8:17 PM GMT)

திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு உள்ளது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், செங்கம், கீழ்பென்னாத்தூர், கலசபாக்கம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு எந்திரங்கள் தனித்தனி அறையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இங்கு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் மூலம் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் இந்த அறைகள் 24 மணி நேரமும் சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வாக்கு எண்ணும் மையத்தினை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். வாக்குப்பதிவு எந்திரங்கள் உள்ள அறைகள் சி.சி.டி.வி. கேமிரா மூலம் கண்காணிக்கப்படுவதை அவர் பார்வையிட்டார். மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்தும், வாக்கு எண்ணும் நாளான்று மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது திருவண்ணாமலை உதவி கலெக்டர் ஸ்ரீதேவி, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வனிதா, துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை மற்றும் பொதுப் பணித் துறையினர், வருவாய்த் துறையினர், போலீசார் உடனிருந்தனர்.

Next Story