மாவட்டத்தில் மணல் கடத்திய 6 பேர் கைது


மாவட்டத்தில் மணல் கடத்திய 6 பேர் கைது
x
தினத்தந்தி 28 April 2019 3:45 AM IST (Updated: 28 April 2019 2:12 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மணல் கடத்தியதாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தேன்கனிக்கோட்டை,

தேன்கனிக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் ஜார்கலட்டி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக ஒரு டிராக்டர் வந்தது. போலீசார் டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மணல் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணலை கடத்தியதாக ஜார்கலட்டியை சேர்ந்த மாதேஷ் (வயது 35) என்பவரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் பறி முதல் செய்யப்பபட்டது.

காவேரிப்பட்டணம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுதுரை மற்றும் போலீசார் தென்பெண்ணை ஆற்று பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் ஒரு யூனிட் மணல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மணலை கடத்தியதாக மிட்டஅள்ளி புதூரை சேர்ந்த விஜய் (33), செந்தில் (29) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

ஓசூர்

ஓசூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவன் மற்றும் போலீசார் ஓ.காரப்பள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து மணலை கடத்தியதாக ஓசூர் தேர்பேட்டை தங்கராஜ் (28), ஓ.காரப்பள்ளி முனிராஜ் (30), ராம் (28) ஆகிய 3 பேரை கைது செய்தனர். 2 லாரிகள் மற்றும் ஒரு பொக்லைன் எந்திரம் பறி முதல் செய்யப்பட்டது.

Next Story