3 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


3 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 29 April 2019 4:30 AM IST (Updated: 29 April 2019 1:58 AM IST)
t-max-icont-min-icon

3 மாத சம்பளம் வழங்காததை கண்டித்து நாகையில் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை பழைய பஸ் நிலையம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர் சங்கத்தினர் மற்றும் தமிழ்நாடு ஒப்பந்த தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கிளை செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். ஒப்பந்த தொழிலாளர் சங்க கிளை செயலாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார்.

இதில் சங்கத்தை சேர்ந்த ரகுமான் உள்பட நாகை, காரைக்கால் மாவட்டங்களில் பணிபுரியும் பி.எஸ்.என்.எல். ஒப்பந்த ஊழியர்கள் 25-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஒப்பந்த தொழிலாளர்களுக்கு கடந்த 3 மாதமாக சம்பளம் வழங்கப்படாததை கண்டித்தும், ஊதிய நிலுவை தொகையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

Next Story