ஆவூர் பெரியநாயகி மாதா ஆலய தேரோட்டம் திரளான கிறிஸ்தவர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
ஆவூர் பெரியநாயகி மாதா ஆலய தேரோட்டத்தில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
ஆவூர்,
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா ஆவூரில் வீரமாமுனிவரால் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தென் தமிழகத்தின் சிறப்பு பெற்ற புனித பெரியநாயகி மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பாஸ்கா தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழாவானது கடந்த 20-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து ஒவ்வொரு நாளும் மாலை நேரத்தில் பல்வேறு பங்குத்தந்தையர்கள் கலந்துகொண்டு திருப்பலி நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பாஸ்காவின் முதல்நாள் நிகழ்ச்சி கடந்த 26-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி அன்று மாலை 7 மணிக்கு கீரனூர் மறைவட்ட அதிபர் மற்றும் பங்குதந்தையான அருளாநந்தம் தலைமையில் பல்வேறு பங்குதந்தையர்கள் கலந்துகொண்ட கூட்டுத்திருப்பலி நடந் தது. பின்னர் இரவு 10 மணியளவில் ஏசு ஆண்டவரின் திருப்பாடுகளின் பாஸ்கா நிகழ்வான மலைப்பொழிவு, இறுதி இரவு உணவு, போதனைகள், புதுமைகள், பாடுகள், ஏசுவின் இறுதி ஊர்வலம் ஆகிய உள்ளத்தை உருக்கும் காட்சிகள் நடைபெற்றது.
தொடர்ந்து ஆண்டவரின் உயிர்ப்பு பாஸ்கா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் அம்மாபேட்டை பங்குதந்தை சவரிராஜ் உள்ளிட்ட அருட்தந்தையர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரை மற்றும் ஆசியுரை வழங்கி தொடங்கி வைத்தனர்.
இதைத்தொடர்ந்து நேற்று அதிகாலை உயிர்த்த ஆண்டவரின் சொரூபத்துடன் கூடிய சப்பர பவனி நடைபெற்்றது. தொடர்ந்து நேற்று காலை 11 மணியளவில் திருச்சி மறைமாவட்ட தலைமை செயலாளர் அருட்தந்தை ஜெயராஜ், பொருளாளர் அருட்தந்தை இன்னாசிமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்ட திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதைதொடர்ந்து மதியம் 1 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது. இதையொட்டி மலர்கள் மற்றும் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட உயிர்த்த ஆண்டவரின் சொரூபம் தாங்கிய பெரிய தேரை சுப்பிரமணியபுரம் பங்குத்தந்தை ஜான்பீட்டர் புனிதம் செய்து அர்ச்சித்து தொடங்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து மேள தாளம் வாணவேடிக்கையுடன் திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர். தேர் ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவர்கள் இழுந்து வந்து மீண்டும் ஆலயத்தின் நிலையை வந்தடைந்தனர்.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு உயிர்த்த ஆண்டவரின் கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆசியுரையுடன் விழா நிறைவுபெற்றது. விழாவையொட்டி பக்கதர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் மற்றும் நீர்மோர் வழங்கப்பட்டது. தேரோட்டத்தில் திருச்சி, புதுக்கோட்டை, விராலிமலை, கீரனூர், இலுப்பூர், மணப்பாறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ் தலைமையில் இருபால் துறவிகள், அருட்சகோதரிகள், நிர்வாகக்குழு, அன்பியங்கள், இளையோர் இயக்கம், பங்கு மக்கள் ஆகியோர் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் கீரனூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரான்சிஸ் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.

Related Tags :
Next Story