குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளுக்கு 19-ந்தேதி இடைத்தேர்தல்: வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாள்
குந்துகோல், சிஞ்சோலி ஆகிய 2 சட்டசபை தொகுதிகளுக்கு வருகிற 19-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்ய இன்று (திங்கட்கிழமை) கடைசி நாள் என்பதால், காங்கிரஸ், பா.ஜனதா வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்கிறார்கள்.
பெங்களூரு,
கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகின்றன.
முதல்-மந்திரி குமாரசாமி தலைமை யிலான மந்திரி சபையில், கர்நாடக நகரசபை நிர்வாகத்துறை மந்திரியாக பணியாற்றி வந்தவர் சி.எஸ்.சிவள்ளி. இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு திடீரென மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
இதையடுத்து அவர் எம்.எல்.ஏ.வாக தேர்வான குந்துகோல் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதுபோல் சிஞ்சோலி தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான உமேஷ் ஜாதவ், மந்திரி பதவி கிடைக்காததால் அதிருப்தியில் இருந்து வந்தார். சமீபத்தில் தான் அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் சேர்ந்தார். பின்னர் கலபுரகி நாடாளுமன்ற தொகுதியில் அவர் பா.ஜனதா வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
இதனால் சிஞ்சோலி தொகுதியும் காலியாக உள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் குந்துகோல், சிஞ்சோலி தொகுதிகளுக்கு மே மாதம் 19-ந்தேதி அன்று தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22-ந் தேதி தொடங்கியது. இதுவரை காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்படாமல் இருந்தனர். இதனால் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் தேர்தல் சூடுபிடிக்காமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் காங்கிரஸ் சார்பில் குந்துகோல் தொகுதியில் குசுமாவதியும், சிஞ்சோலி தொகுதியில் சுபாஷ் ரத்தோடும் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. இதில் குசுமாவதி, மறைந்த மந்திரி சி.எஸ்.சிவள்ளியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கர்நாடக பா.ஜனதா சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சி நேற்று அறிவித்தது. அதன்படி குந்துகோல் தொகுதியில் சிக்கன்னகவுடர், சிஞ்சோலியில் உமேஷ் ஜாதவ்வின் மகன் அவினாஷ் ஜாதவ் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இந்த நிலையில் குந்துகோல், சிஞ்சோலி ஆகிய தொகுதி களுக்கான வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று(திங்கட் கிழமை) கடைசி நாள் ஆகும். இதனால் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் இன்று காலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளனர்.
இடைத்தேர்தல் நடைபெறும் 2 தொகுதிகளும் காங்கிரஸ் வசம் இருந்தவை ஆகும். அந்த தொகுதிகளை தக்க வைக்க காங்கிரஸ் வியூகம் வகுத்துள்ளது. இதற்காக அனைத்து மந்திரிகளுக்கும் தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரசுக்கு ஜனதா தளம்(எஸ்) ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளது.
காங்கிரஸ் வசம் உள்ள அந்த தொகுதிகளை கைப்பற்ற பா.ஜனதா தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதில் இந்த 2 தொகுதிகளின் வெற்றி முக்கிய பங்காற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story