மரக்காணத்தில், அ.ம.மு.க. பிரமுகர் வீட்டில் 7 பவுன் நகை திருடிய பெண் கைது
மரக்காணத்தில் அ.ம.மு.க. பிரமுகர் வீட்டில் 7 பவுன் நகை திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
மரக்காணம்,
மரக்காணத்தை அடுத்த காளியாங்குப்பம் விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் நாதமணியன் (வயது 36), அ.ம.மு.க. பிரமுகர்.
சம்பவத்தன்று இவருடைய வீட்டுக்கு ஒரு பெண் வந்தார். அப்போது அவர், தான் வெளியூரில் இருந்து வருவதாகவும், இயற்கை உபாதை கழிக்க வீட்டின் கழிப்பறையை பயன்படுத்த அனுமதிக்குமாறும் கூறினார். அதற்கு நாதமணியன் குடும்பத்தினர் சம்மதித்தனர்.
உடனே அந்த பெண் வீட்டுக்குள் அவசரமாக சென்றார். ஆனால் வெகுநேரமாகியும் அவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த நாதமணியின் குடும்பத்தினர் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அந்த பெண், வீட்டில் இருந்த பீரோவை திறந்து அதில் இருந்த 7 பவுன் நகையை திருடிக் கொண்டு வெளியே வந்தது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாதமணியன் குடும்பத்தினர் அவரை மடக்கிப் பிடித்து மரக்காணம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் மரக்காணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர், காஞ்சீபுரம் மாவட்டம் மதுராந்தகம் தாலுகா மேற்கு செய்யூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த கல்பனா(36) என்பதும், இவர் மீது அங்குள்ள போலீஸ் நிலையத்தில் சாராயம் விற்ற வழக்கு, திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்பனாவை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 7 பவுன் நகை மீட்கப்பட்டது.
Related Tags :
Next Story