குளச்சலில் 8 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்; 4 பேர் கைது ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு திருடியது அம்பலம்
குளச்சலில் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு மோட்டார் சைக்கிள்கள் திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.
குளச்சல்,
குளச்சல் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் இரவில் வீடுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இதுகுறித்து சைமன் காலனி சுபின், சன்னதி தெரு ரமேஷ், பனவிளை மகேஷ், மேக்கோடு ஆனந்த் ஆகியோர் குளச்சல் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
இதேபோல் தக்கலை, மார்த்தாண்டம் உள்ளிட்ட பகுதிகளிலும் மோட்டார் சைக்கிள்கள் திருட்டு அதிகமாக நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் குளச்சல் போலீசார் இரும்பிலி சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ஒரே மோட்டார் சைக்கிளில் 4 வாலிபர்கள் வேகமாக வந்த னர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களை நிறுத்தும்படி சைகை காட்டினர்.
ஆனால் போலீசாரை கண்டதும் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல், அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். சுதாரித்து கொண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர்.
பின்னர் நடத்திய விசாரணையில், போலீசாரிடம் அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசினார்கள். அதைத்தொடர்ந்து 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணையை தொடங்கினர். இதில் 4 பேரும் மோட்டார் சைக்கிள் திருடர்கள் என்ற தகவல் வெளியானது.
மேலும் அவர்கள் உதய மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த மீன்பிடி தொழிலாளியான மரிய கிராஸ்வின் (வயது 20), லியோன் நகரை சேர்ந்த எபின் நாயகம் (21), இரும்பிலி கரை பட்டதாரியான முகமது அனஸ் (22), அகஸ்தீஸ்வரம் பெரிய கோவில் தெருவை சேர்ந்த கண்ணன் (20) என்பதும் தெரியவந்தது.
நண்பர்களான 4 பேரும் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு தக்கலை, கருங்கல், மார்த்தாண்டம், கோட்டார் உள்ளிட்ட பல பகுதிகளில் கைவரிசை காட்டியுள்ளனர். மோட்டார் சைக்கிளை திருடும் கும்பல் வண்டியின் பதிவெண் நம்பரை மாற்றி விற்பனை செய்துள்ளனர். அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்து ஆடம்பரமாக பல்வேறு வகைகளில் பணத்தை செலவழித்துள்ளனர்.
இதனையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 8 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story