சின்னசேலம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி - போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் புகார்


சின்னசேலம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி - போலீஸ் சூப்பிரண்டிடம் பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 30 April 2019 4:15 AM IST (Updated: 29 April 2019 10:16 PM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் பகுதியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸ் சூப்பிரண்டிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் புகார் மனு கொடுத்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று மதியம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நாங்கள் அனைவரும் கூலி வேலை செய்து வருகிறோம். சின்னசேலம் கடைவீதியை சேர்ந்த 4 பேர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஏலச்சீட்டு நடத்தி வந்தனர். இதை நம்பி நாங்கள் 70-க்கும் மேற்பட்டோர் அந்த ஏலச்சீட்டில் சேர்ந்து மாதந்தோறும் பணம் கட்டி வந்தோம்.

இந்த நிலையில் அவர்கள் 4 பேரில் ஒருவர் திடீரென இறந்து விட்டார். இதையடுத்து மற்ற 3 பேரிடம் சென்று எங்களுடைய பணம் என்னவாயிற்று என்று கேட்டதற்கு அதற்கு நாங்களே பொறுப்பு ஏற்கிறோம், என்றும் பணத்தை விரைவில் கொடுத்து விடுவதாக அவர்கள் 3 பேரும் கூறினார்கள்.

ஆனால் பணத்தை கொடுக்கவில்லை. பலமுறை அவர்களிடம் சென்று வற்புறுத்தி கேட்டும் இதுநாள் வரையிலும் பணம் தரவில்லை. இவ்வாறாக மொத்தம் ரூ.1 கோடிக்கு ஏலச்சீட்டு பணத்தை அவர்கள் 3 பேரும் மோசடி செய்துவிட்டனர். எனவே அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து எங்களுக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற போலீஸ் சூப்பிரண்டு இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Next Story