தோல்வி பயத்தில் தற்கொலை செய்த மாணவி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி
மதுராந்தகம் அருகே தோல்வி பயத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றது தெரியவந்துள்ளது.
மதுராந்தகம்,
காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் அடுத்த தண்டரை புதுச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் சிவா. இவரது மகள் சந்தியா (வயது 15). இவர் மொரப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த மார்ச் மாதம் நடந்த பொதுத்தேர்வை சந்தியா சரியாக எழுதவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி அடிக்கடி பெற்றோரிடமும், தோழிகளிடமும் கூறி வருத்தம் அடைந்தார்.
இந்த நிலையில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவு வெளியானது. தேர்வு எழுதி இருந்த சந்தியா தோல்வி அடைந்து விடுவோமோ? என்ற பயத்தில் இருந்தார்.
தேர்வு முடிவை பார்க் காத சந்தியா, நேற்று அதிகாலை வீட்டில் யாரும் இல்லாதபோது தூக் குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். மகள் தூக்கில் பிணமாக தொங்குவதை பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். தகவல் அறிந்ததும் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே மாணவி சந்தியா தேர்ச்சி பெற்றாரா? என்று அவரது தோழிகள் இணையதளத்தில் பார்த்தனர். இதில் அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 191 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றது தெரியவந்தது.
தேர்வில் வெற்றி பெற்ற நிலையில் அதனை பார்க்காமலேயே தேர்வு முடிவு வெளியாவதற்குமுன்பே தோல்வி பயத்தில் சந்தியா தற்கொலை செய்த சம்பவம் அவரது தோழிகள், உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story