மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் கண்ணாடி, கணினிகளை அடித்து உடைத்த அலுவலர் கைது
பணி மாறுதல் கிடைக் காத விரக்தியில், மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் கண்ணாடி, கணினிகளை அடித்து உடைத்த அலுவலரை போலீசார் கைது செய்தனர்.
சுந்தரக்கோட்டை,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தலைமை தபால் நிலையத்தில் திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையை சேர்ந்த ஜோயல்ராஜ் (வயது 29) என்பவர் கிளர்க்காக வேலை பார்த்து வருகிறார். இவர், தற்போது அயல் பணியாக பொதக்குடி தபால் நிலையத்தில் பணியாற்றி வருகிறார்.
நேற்று மதியம் பொதக்குடியில் இருந்து மன்னார்குடி தலைமை தபால் நிலையத்திற்கு ஜோயல்ராஜ் வந்தார். அப்போது அவர் ஆவேசமாக தலைமை தபால் நிலைய அலுவலகத்தில் உள்ள கண்ணாடிகள், கணினி, பீரோ, டேபிள், நாற்காலிகள் என கண்ணில் கண்ட அனைத்தையும் அடித்து உடைத்தார். இதனால் அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். ஜோயல்ராஜை பிடித்து கட்டுப்படுத்த அங்கிருந்த ஊழியர்கள் முயன்றனர். ஆனால் அவர்களால் முடியவில்லை. இதை பார்த்து அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பயத்தில் தபால் அலுவலகத்தில் இருந்து வெளியில் ஓடினர்.
இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் மன்னார்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஜோயல்ராஜை மடக்கிப்பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக மன்னார்குடி தலைமை தபால் நிலைய அதிகாரி சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோயல்ராஜை கைது செய்தனர்.ஜோயல்ராஜ் பணி மாறுதல் கேட்டு வந்துள்ளார். பணி மாறுதல் கிடைக்காத விரக்தியில் தான் அவர், தபால் நிலையத்தில் பொருட்களை அடித்து உடைத்து உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பும் இதேபோல இரண்டு முறை ஜோயல்ராஜ் நடந்து கொண்டது குறிப்பிடத்தக் கது. தலைமை தபால் நிலையத்தில் கண்ணாடி, கணினிகளை அலுவலர் அடித்து உடைத்த சம்பவத்தால் மன்னார்குடியில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Related Tags :
Next Story