ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள்


ஆபத்தை உணராமல் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள்
x
தினத்தந்தி 30 April 2019 4:00 AM IST (Updated: 30 April 2019 1:39 AM IST)
t-max-icont-min-icon

90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

அரியலூர்,

அரியலூர் நகரில் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி 2 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதில் 90 சதவீதம் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் இருசக்கர வாகன ஓட்டிகள் பாலத்தை பயன்படுத்தி வருகின்றனர். பாலத்தின் பல இடங்களில் கற்கள், இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பல உபகரணங்கள் ஆங்காங்கே கொட்டி கிடக்கின்றன. இருப்பினும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பயணம் செய்கின்றனர். முழு பணிகள் முடிந்து விரைவில் பாலத்தை திறக்க வேண்டும். இல்லை என்றால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

Next Story