எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 96.51 சதவீதம் பேர் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட அதிகம்


எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 96.51 சதவீதம் பேர் தேர்ச்சி கடந்த ஆண்டைவிட அதிகம்
x
தினத்தந்தி 30 April 2019 4:30 AM IST (Updated: 30 April 2019 2:01 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 96.51 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இது கடந்த ஆண்டைவிட 0.41 சதவீதம் அதிகம் ஆகும்.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 11 ஆயிரத்து 670 மாணவர்கள், 11 ஆயிரத்து 601 மாணவிகள் என மொத்தம் 23 ஆயிரத்து 271 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வின் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 11 ஆயிரத்து 103 மாணவர்கள், 11 ஆயிரத்து 357 மாணவிகள் என மொத்தம் 22 ஆயிரத்து 460 பேர் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது 96.51 சதவீதம் ஆகும். இது கடந்த ஆண்டைவிட 0.41 சதவீதம் அதிகம் ஆகும்.

கல்வி மாவட்ட வாரியாக

அறந்தாங்கி கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 790 மாணவர்கள், 3 ஆயிரத்து 706 மாணவிகள் என மொத்தம் 7 ஆயிரத்து 496 பேர் தேர்வு எழுதினர். இதில் 3 ஆயிரத்து 649 மாணவர்கள் உள்பட 7 ஆயிரத்து 296 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 97.33 சதவீதம் ஆகும். இலுப்பூர் கல்வி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 358 மாணவர்கள், 3 ஆயிரத்து 291 மாணவிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 649 பேர் தேர்வு எழுதினர். இதில் 6 ஆயிரத்து 414 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 96.47 சதவீதம் ஆகும்.

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 4 ஆயிரத்து 522 மாணவர்கள், 4 ஆயிரத்து 604 மாணவிகள் என மொத்தம் 9 ஆயிரத்து 126 பேர் தேர்வு எழுதினர். இதில் 4 ஆயிரத்து 257 மாணவர்கள் உள்பட 8 ஆயிரத்து 750 பேர் தேர்ச்சி பெற்றனர். இது 95.88 சதவீதம் ஆகும்.

வெறிச்சோடிய பள்ளிகள்

தேர்வு முடிவுகள் வெளியானதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், தேர்ச்சி விவரம் தகவல் பலகையில் ஒட்டப்பட்டு இருந்தது. இதனை மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆர்வமாக பார்த்து சென்றனர். இருப்பினும் பெரும்பாலான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு முடிவுகளை பார்க்க மாணவ, மாணவிகள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு வரவில்லை. இதனால் பள்ளி வளாகங்கள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. 

Next Story