குமரி மாவட்டத்தில் மழை: புத்தன் அணை பகுதியில் 78.2 மி.மீ. பதிவு
குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. இதில் புத்தன் அணை பகுதியில் அதிகபட்சமாக 78.2 மி.மீ. பதிவானது.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மக்களை கோடை வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் செல்லவே மக்கள் அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளதோடு, வீடுகளுக்குள்ளேயே முடங்கும் நிலையும் உருவாகியுள்ளது. மின்சாரம் சிறிது நேரம் தடைபட்டாலும் வீடுகளில் உள்ளவர்களும், அலுவலகங்களில் பணியாற்றுபவர்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாக இடையிடையே குமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இது வெயிலின் உக்கிரத்தில் சிக்கித்தவித்த மக்களுக்கு இதம் அளிப்பதாக இருந்து வருகிறது. நேற்று முன்தினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக புத்தன் அணை பகுதியில் 78.2 மி.மீ. மழை பதிவாகி இருந்தது. மற்ற பகுதிகளில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-
பேச்சிப்பாறை- 1, பெருஞ்சாணி- 77.6, சிற்றார் 1- 10.4, சிற்றார் 2- 18, பூதப்பாண்டி- 6.8, களியல்- 6.2, கன்னிமார்- 8.4, குழித்துறை- 13, சுருளக்கோடு- 37.4, தக்கலை- 2, குளச்சல்- 7.2, இரணியல்- 6.2, பாலமோர்- 10.4, கோழிப்போர்விளை- 20, அடையாமடை- 53, குருந்தங்கோடு- 4, முள்ளங்கினாவிளை- 18, ஆனைக்கிடங்கு- 2.2 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.

Related Tags :
Next Story