கருக்கலைப்பு செய்த போது கர்ப்பிணி சாவு: போலி பெண் டாக்டர், மகன் தலைமறைவு
கருக்கலைப்பு செய்த போது கர்ப்பிணி இறந்த சம்பவம் தொடர்பாக போலி பெண் டாக்டரும், அவருடைய மகனும் தலைமறைவாகி விட்டனர். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு செய்து ஆயுர்வேத மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்தனர்.
நெகமம்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த நெகமம் மெட்டுவாவி அரிஜன காலனியை சேர்ந்தவர் செல்வராஜ். கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வனிதாமணி (வயது 37). இவர்களுக்கு திருமணம் ஆகி 4 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் வனிதாமணி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த வனிதாமணியின் மகன் மாரிமுத்துவுக்கு இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் நடைபெற உள்ளதாலும், ஏற்கனவே 5 குழந்தைகள் இருப்பதாலும் கருக்கலைப்பு செய்து விடலாம் என்று முடிவு செய்தனர்.
இதற்காக வடசித்தூரில் உள்ள யேகோவாநிஷி ஆயுர்வேதிக் சென்டர் என்ற தனியார் மருத்துவமனையை அணுகி உள்ளார். அங்கு டாக்டராக இருந்த முத்துலட்சுமி, சித்தா மருத்துவம் படிக்கும் அவருடைய மகன் கார்த்திக் (25) ஆகியோர் ஆலோசனை செய்து வனிதாமணிக்கு கருக்கலைப்பு ஊசி போட்டுள்ளனர்.
இதனால் வனிதாமணி உடல்நிலை மோசமானதால் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று உள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வனிதாமணியின் மகன் மாரிமுத்து கொடுத்த புகாரின் பேரில் நெகமம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், முத்துலட்சுமி, ஆயுர்வேதம் தொடர்பாக எந்த படிப்பும் படிக்க வில்லை என்றும், ஆனால் அவர் ஆயுர்வேதம் படித்ததாக கூறி சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் போலி டாக்டரான முத்துலட்சுமி, அவரது மகன் கார்த்திக் ஆகியோர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர். அவர்கள் 2 பேரையும் பிடிக்க நெகமம் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்ராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள், கோவை, உடுமலை, பொள்ளாச்சி, திருப்பூர், கேரளா ஆகிய இடங்களில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் பானுமதி தலைமையில் குடும்ப நலத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் தனம் ஆகியோர் அடங்கிய 10-க்கும் மேற்பட்ட மருத்துவ குழுவினர் வடசித்தூரில் உள்ள முத்துலட்சுமிக்கு சொந்தமான யேகோவாநிஷி ஆயுர்வேத மருத்துவமனைக்கு நேற்று மாலை ‘சீல்’ வைத்தனர். மேலும் மெட்டுவாவியில் உள்ள இறந்து போன கர்ப்பிணி வனிதாமணியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர்.
இது குறித்து மாவட்ட குடும்ப நலத்துறை இணை இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:-
மெட்டுவாவியை சேர்ந்த வனிதாமணி என்பவர் கருக்கலைப்புக்காக தவறுதலான ஊசி போடப்பட்டதால் இறப்பு நிகழ்ந்ததாக வெளியான தகவலின் பேரில் மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி பொது சுகாதார துறை துணை இயக்குனர் தலைமையிலான மருத்துவக்குழுவினர் மெட்டுவாவியில் உள்ள வனிதாமணியின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டோம். வடசித்தூரில் உள்ள முத்துலட்சுமியின் ஆயுர்வேதிக் சென்டருக்கு சென்ற போது வாசல் கதவு பூட்டப்பட்டு இருந்தது. எனவே அந்த மருத்துவமனைக்கு ‘சீல்’ வைத்தோம்.
அந்த மருத்துவமனையை சுற்றி ஆய்வு செய்த போது அதன் பின்புற பகுதியில் அலோபதி மருத்துவர்களால் பயன்படுத்தப்படும் ஊசிகள், சிரஞ்சு, மாத்திரைகள், பாட்டில்கள் ஆகியவை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. முத்துலட்சுமி டி.ஏ.எம்.எஸ். என்ற பட்டப்படிப்பு படித்ததாக கூறி வந்துள்ளார். ஆனால் அது போன்ற ஒரு படிப்பே இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், வடசித்தூர் பகுதியில் முத்துலட்சுமி கடந்த 15 ஆண்டுகளாக மருத்துவமனை நடத்தி வருகிறார். கடந்த 2018- ம் ஆண்டு மாவட்ட மருத்துவ அலுவலர்கள் மருத்துவமனைக்கு சோதனை நடத்த வந்த போது முத்துலட்சுமி தப்பிஓடிவிட்டார். இதனால் சில மாதங்களாக மருத்துவமனை செயல்படாமல் இருந்தது. அதன்பிறகு செயல்பட தொடங்கி விட்டது. இதை அதிகாரிகள் கண்டுகொள்ளாததால் ஒரு கர்ப்பிணி உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. எனவே போலி டாக்டர்களை கண்டறிந்து சுகாதார துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Related Tags :
Next Story