கடலூர் மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட 13 பேர் கைது

மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டதாக 13 பேரை கைது செய்த போலீசார், லாரி மற்றும் மாட்டுவண்டிகளை பறிமுதல் செய்தனர்.
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நெல்லிக்குப்பம் அடுத்த வான்பாக்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மணல் அள்ளி வந்த மாட்டுவண்டிகளை நிறுத்தி, அதை ஓட்டி வந்தவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அதில், தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதையடுத்து 9 மாட்டுவண்டிகளையும் போலீசார் பறிமுதல் செய்து, அதை ஓட்டி வந்தவர்களையும் பிடித்து நெல்லிக்குப்பம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வான்பாக்கத்தை சேர்ந்த பிச்சை, விஜயகாந்த், கோகுல், மாயக்கண்ணன், தேவநாதன், ராம்கி, ஞானசேகர், நாகமுத்து, சோழவள்ளியை சேர்ந்த சிவமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் விருத்தாசலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆதி தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாத்துக்கூடல் சாலையில் வந்த லாரியை நிறுத்தி விசாரித்தனர்.
அதில் மணிமுக்தாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விருத்தாசலம் அன்புமணி நகரை சேர்ந்த சின்னதுரை மகன் சதீஷ்குமார் என்பவரை கைது செய்தனர்.
கடலூர் முதுநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது முதுநகர் ஆஞ்சநேயர்கோவில் அருகே மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த கொடிக்கால்குப்பத்தை சேர்ந்த கண்ணன்(68), தேரடிதெருவை சேர்ந்த முருகன்(54) ஆகிய 2 பேரையும் போலீசார் கைதுசெய்து அவர்களின் மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
அதேபோல் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் கடலூர் நவநீதம்நகரில் மாட்டு வண்டியில் மணல் கடத்திவந்ததாக அதே பகுதியை சேர்ந்த மணி(24) என்ற வாலிபரை கைது செய்து, அவரது மாட்டு வண்டியையும் பறிமுதல் செய்தனர்.

Related Tags :
Next Story