சிவாஜிபார்க் மைதானத்தில் மராட்டிய தினம் இன்று கொண்டாட்டம் : கவர்னர் தேசியகொடி ஏற்றுகிறார்


சிவாஜிபார்க் மைதானத்தில் மராட்டிய தினம் இன்று கொண்டாட்டம் : கவர்னர் தேசியகொடி ஏற்றுகிறார்
x
தினத்தந்தி 30 April 2019 11:32 PM GMT (Updated: 2019-05-01T05:02:14+05:30)

சிவாஜிபார்க் மைதானத்தில் இன்று மராட்டிய தினம் கொண்டாடப்படுகிறது. இதில், கவர்னர் வித்யாசாகர் ராவ் தேசிய கொடியை ஏற்றி வைக்கிறார்.

மும்பை, 

மாநில அரசு சார்பில் மும்பை தாதர் சிவாஜிபார்க் மைதானத்தில் 59-வது மராட்டிய தினம் இன்று (புதன் கிழமை) கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்துகொண்டு காலை 8 மணியளவில் தேசியகொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகிறார். பின்னர் போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடுகிறார்.

விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மாநில மந்திரிகள், எம்.எல்.ஏ.க்கள், அரசு உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

இதைத்தொடர்ந்து காலை 9 மணிக்கு சிவாஜிபார்க் கிரிட பவனில் மும்பை மாநகராட்சி சார்பில் நடைபெறும் மராட்டிய தினவிழாவில் கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்து கொள்கிறார்.

இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து மாலை 6 மணிக்கு ராஜ்பவனில் கவர்னர் தேநீர் விருந்து கொடுக்கிறார்.

Next Story