வானவில் : போனைக் கொண்டு சார்ஜ் ஏற்றலாம்


வானவில் : போனைக் கொண்டு சார்ஜ் ஏற்றலாம்
x
தினத்தந்தி 1 May 2019 6:23 AM GMT (Updated: 2019-05-01T11:53:37+05:30)

லேப்டாப், ஸ்மார்ட் டி.வி. போன்ற பல கருவிகள் வந்துவிட்டதால் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சார்ஜர் மற்றும் கேபிள்களை பாதுகாக்க வேண்டியிருக்கும்.

தெற்கு ஆப்பிரிக்காவை சேர்ந்த நிக்கவுட் என்னும் மாணவர் ‘ஸீட்’ என்னும் ஒரு ஸ்மார்ட் போனை கண்டுபிடித்துள்ளார். பெயருக்கு ஏற்றார் போல இந்த கருவி ஒரு விதையை போல செயல்படுகிறது. எல்லா வகை ஸ்மார்ட் கருவிகளையும் இத்துடன் இணைக்கலாம்.

இது பொருத்தப்பட்ட கருவியுடன் தகவல்களை பரிமாறிக் கொள்ள உதவும். அதாவது வயர் ஏதுமின்றி இந்த ஸீட் போனை மட்டும் மற்ற ஸ்மார்ட் கருவிகளோடு டாக்கிங் ஸ்டேஷன் (DOCKING  STATION)என்று சொல்லக்கூடிய இடத்தில் வைத்துவிட்டால், சார்ஜ் ஏற்றுவதிலிருந்து அனைத்தையும் இது பார்த்துக் கொள்ளும்.

இதனால் இடமும் மிச்சம். பணமும் சேமிக்கப்படும்.அலுவலகங்களில் இந்த கருவி பெரிதும் உதவியாக இருக்கும். எங்கு சென்றாலும் இந்த போனை மட்டும் எடுத்துச் சென்றால் போதும். வருங்காலத்தில் இந்த தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படும் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.


Next Story