வானவில் : சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்


வானவில் : சாம்சங் கேலக்ஸி ஏ70 ஸ்மார்ட்போன்
x
தினத்தந்தி 1 May 2019 7:20 AM GMT (Updated: 2019-05-01T12:50:13+05:30)

கொரியாவின் சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போனில் பிரீமியம் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் கேலக்ஸி ஏ70 என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. 6.7 அங்குல சூப்பர் அமோலெட் தொடு திரை உள்ளது. முன்பக்கத்திலேயே விரல் ரேகை பதிவு மூலம் அன்லாக் செய்யும் வசதி கொண்டது. இதுதவிர பேசியல் ரெகக்னிஷன் வசதியும் கொண்டது. குவால்காம் ஸ்நாப்டிராகன் 675 ஆக்டாகோர் பிராசஸர் உள்ளது.

மொத்தம் 40 மெகா பிக்ஸெல் கொண்ட 3 கேமராக்கள் உள்ள இதில் பிரதான கேமரா 32 மெகா பிக்ஸெல் கொண்டது. இதனால் ஸ்லோமோஷன் வீடியோ காட்சிகளை மிகச் சிறப்பாக இதில் பதிவு செய்ய முடியும். எந்த கோணத்திலிருந்தும், எத்தகைய வெளிச்சத்திலிருந்தும் படமெடுக்க உதவும்.

அத்துடன் உறுதுணையாக 8 மெகா பிக்ஸெல் வைடு ஆங்கிள் கேமரா உள்ளது. இது 123 கோணம் வரை சுழலும். 5 மெகா பிக்ஸெல் கேமரா படங்களை துல்லியமாக பதிவு செய்ய உதவும். இதில் சீன் ஆப்டிமைஸர் உள்ளது. இது 20 விதமான மோட்களில் செயல்படும். இது கலர், வெளிச்சம் உள்ளிட்டவற்றை தேவையான அளவுக்கு படமெடுக்கும் பொருள் மீது பரவச் செய்யும்.

முன்புறத்திலும் 32 மெகா பிக்ஸெல் கேமரா உள்ளது செல்பி பிரியர்களுக்கு மிகப் பெரிய வரப்பிரசாதமாகும். 6 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. உள்ளடு நினைவக வசதி கொண்டது. இதில் மைக்ரோ எஸ்.டி. ஸ்லாட் வசதி உள்ளது. இதனால் நினைவகத் திறனை 512 ஜி.பி. வரை நீட்டித்துக் கொள்ள முடியும்.

இதில் 4,500 எம்.ஏ.ஹெச். பேட்டரி 25 வாட் சூப்பர் பாஸ்ட் சார்ஜிங் வசதியோடு வந்துள்ளது. இதில் சாம்சங் பே வாலட் உள்ளது. ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தில் செயல்படும் இதன் விலை ரூ.28,990 ஆகும். வெள்ளை, நீலம், கருப்பு ஆகிய வண்ணங்களில் கிடைக்கும்.


Next Story