விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும்; ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம்
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25,000 வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் என்று ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொண்டி,
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டார விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவிலில் நடைபெற்றது. கூட்டத்தில் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த ஆதியூர் தம்பிராஜ், திருவொற்றியூர் கவாஸ்கர், மாவூர் இளங்கோ, ஏ.ஆர்.மங்கலம் காந்தி, தளிர்மருங்கூர் வெற்றிவேல், கோடனூர் ராஜா, பாண்டுகுடி விஜயேந்திரன் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
இக்கூட்டத்தில் கடந்த 2017-18-ம் ஆண்டில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்டம் முழுவதும் 83 வருவாய் கிராமங்களுக்கு 25 சதவீதம் மட்டுமே பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனை 100 சதவீதமாக உடனடியாக வழங்க வேண்டும். மேலும் ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 35 வருவாய் கிராமங்களுக்கு 2017-18-ம் ஆண்டிற்கு பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவில்லை.
எனவே அதனை விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும். 2018-19-ம் ஆண்டு கடுமையான வறட்சியின் காரணமாக திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த 2 தாலுகாவில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் 100 சதவீதம் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை வழங்குவதற்கான உத்தரவாதத்தை மாவட்ட கலெக்டர் வழங்க வேண்டும். தொடர்ந்து 4 ஆண்டுகளாக கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் உள்ள விவசாயிகளுக்கு கடந்த 2016-ம் ஆண்டிற்கு மட்டும் அரசு நிவாரணம் வழங்கியுள்ளது.
தற்போது 2018-19-ம் ஆண்டு ராமநாதபுரம் மாவட்டத்தை நீரியல் வறட்சி மாவட்டமாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் அறிவிக்கப்படவில்லை. எனவே மாவட்ட விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 வீதம் வறட்சி நிவாரணமாக வழங்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் ஆகிய தாலுகாக்களில் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை விவசாயிகளுக்கு வழங்கப்படாததையொட்டி போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இந்த கோரிக்கைகளை வருகிற 27-ந்தேதிக்குள் நிறைவேற்றாவிட்டால் 28-ந்தேதி திருவாடானையில் ஆலோசனை கூட்டம் நடத்துவது என்றும், அதனை தொடர்ந்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்துவது எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story