பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்


பெரம்பலூரில் பள்ளி மாணவர்களுக்கான கோடைகால பயிற்சி முகாம்
x
தினத்தந்தி 2 May 2019 4:30 AM IST (Updated: 2 May 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவிலான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூரில் நேற்று தொடங்கியது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட அளவில் 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகளுக்கான கோடைகால பயிற்சி முகாம் பெரம்பலூரில் உள்ள எம்.ஜி.ஆர். விளையாட்டு மைதானத்தில் நேற்று காலை தொடங்கியது. இந்த பயிற்சி முகாமில் மாணவ- மாணவிகளுக்கு தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு பயிற்றுனர்கள் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. காலை 6.30 மணிக்கு தொடங்கிய பயிற்சி 8.30 மணி வரையிலும், மீண்டும் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய பயிற்சி 6 மணி வரையிலும் நடைபெற்றது. இதில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 வயதிற்கு உட்பட்ட பள்ளி மாணவ- மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

வேப்பந்தட்டையிலும்...

இந்த கோடை கால பயிற்சி முகாம் வருகிற 21-ந் தேதி வரை நடக்கிறது. பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் மாணவ- மாணவிகளுக்கு பயிற்சியின் முடிவில் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது. இதேபோல் வேப்பந்தட்டை மினி விளையாட்டு அரங்கத்தில் கோடைக்கால பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. இந்த பயிற்சி முகாம் வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. 

Next Story