கடந்த ஒரு வருடத்துக்குமேல் காலியாக உள்ள லஞ்ச ஒழிப்புதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


கடந்த ஒரு வருடத்துக்குமேல் காலியாக உள்ள லஞ்ச ஒழிப்புதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடம் அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 1 May 2019 10:45 PM GMT (Updated: 1 May 2019 7:59 PM GMT)

விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடம் கடந்த 1 வரு டத்திற்குமேல் காலியாக உள்ளதால் இப்பணியிடத்தை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

விருதுநகர்,

விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்பத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி வகித்து வந்த சீனிவாச பெருமாள், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக கடந்த ஏப்ரல் மாதம் பதவி உயர்வு பெற்றதால் இடமாற்றம் செய்யப்பட்டார். கடந்த காலங்களில் இம்மாவட்டத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்ற பின்பும் அதே பணி இடத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அந்தஸ்தில் பணியினை தொடர அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் துணை போலீஸ் சூப்பிரண்டாக இருந்த சீனிவாச பெருமாள் மட்டும் பதவி உயர்வு பெற்ற பின்னர் இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் விருப்பதின் அடிப்படையில் கூட பணியிட மாற்றம் செய்யப்பட்டு இருக்கலாம். ஆனால் அவர் மாறுதல் ஆகி சென்று 1 வருடம் ஆகியும் அந்த பணியிடம் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளது.

ஒவ்வொரு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கென துணை போலீஸ் சூப்பிரண்டு நியமனம் செய்யப்படுவதே அரசு துறைகளை முறையாக கண்காணித்து முறைகேடுகளை தவிர்க்க அவ்வப்போது தாமதம் இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான். ஆனால் இம்மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பணியிடம் 1 ஆண்டுக்கு மேலாக காலியாக உள்ள நிலையில் லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் புகார் கூறும் நிலை உள்ளது.

ஏன்னெனில் பிற மாவட்டங்களில் பணியாற்றும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் கூடுதல் பொறுப்பாக இந்த மாவட்டத்தையும் கவனித்து வருவதால் இம்மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையின் செயல்பாட்டில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளது. மாநில அளவில் லோக் ஆயுக்தா போன்ற அமைப்புகளுக்கு அதிகாரிகளை நியமனம் செய்வதில் அக்கறை காட்டி வரும் மாநில அரசு ஒரு மாவட்டத்தில் முக்கிய துறையான லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தலைமை பொறுப்பு வகிக்கும் துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடத்துக்கு அதிகாரியை நியமிக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை.

கடந்த 1 வருடத்தில் தமிழகம் முழுவதும் 100–க்கும் மேற்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ள நிலையிலும், இம்மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பணி இடத்தை காலியாகவே விட்டு, விட்டது ஏற்புடையது அல்ல. இதற்கு குறிப்பிட்ட காரணம் ஏதும் இருக்கிறதா என்றும் தெரியவில்லை.

எனவே தமிழக அரசு மேலும் தாமதிக்காமல் விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறைக்கு துணை போலீஸ் சூப்பிரண்டை நியமிக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு ள்ளது. அப்போது தான் இம்மாவட்ட மக்களுக்கும் தங்களது புகார் மீதான நடவடிக்கை எ டுக்கப்படும் என்ற நம்பிக்கை உருவாகும் நிலை ஏற்படும்.


Next Story