ரிஷிவந்தியம் அருகே மாணவி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை


ரிஷிவந்தியம் அருகே மாணவி, விஷம் குடித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 2 May 2019 4:30 AM IST (Updated: 2 May 2019 1:53 AM IST)
t-max-icont-min-icon

ரிஷிவந்தியம் அருகே மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரிஷிவந்தியம்,

ரிஷிவந்தியம் அருகே உள்ள கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னன். இவரது மகள் தீபா (வயது 17). இவர் ரிஷிவந்தியத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்துள்ளார். சம்பவத்தன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டார். இதில் அவர் மயங்கிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் இரவு தீபா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பொன்னன் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீபா காதல் தோல்வியால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவரது சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உண்டா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story