திருச்சி மாவட்டத்தில் மே தின கொண்டாட்டம்


திருச்சி மாவட்டத்தில் மே தின கொண்டாட்டம்
x
தினத்தந்தி 2 May 2019 4:15 AM IST (Updated: 2 May 2019 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று மேதினம் கொண்டாடப்பட்டது.

திருச்சி,

திருச்சி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் நேற்று என்.எப்.டி.இ. தொழிற்சங்கம் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. சேதுராமன் விழாவுக்கு தலைமை தாங்கி சங்க கொடி ஏற்றினார். மாவட்ட செயலாளர் பழனியப்பன், மாநில செயலாளர் குணசேகரன், கிளை செயலாளர் வெங்கடசுப்பிரமணியன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். திருச்சி நகரில் மொத்தம் 11 இடங்களில் என்.எப்.டி.இ. சங்கம் சார்பில் மே தின விழா கொண்டாடப்பட்டது.

புள்ளம்பாடி

மேலும் புள்ளம்பாடி பேரூராட்சியில் தமிழ்நாடு பேரூராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் மே தினம் கொண்டாடப்பட்டது. விழாவிற்கு புள்ளம்பாடி கிளை தலைவர் முருகேசன் தலைமை தாங்கினார். செயலாளர் மாரியப்பன் பொருளாளர் சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பேரூராட்சிகளின் பணியாளர்கள் சங்க மாநில பொருளாளர் சாகுல்அமீது கொடியேற்றி உழைப்பாளர்களின் சிறப்பு குறித்து விளக்கி பேசினார். விழாவில் பேரூராட்சி அலுவலர்கள் துப்புரவு பணியாளர்கள் திரளாக கலந்துகொண்டனர். முன்னதாக இளநிலை அலுவலர் குமார் வரவேற்றார். முடிவில் வரிதண்டலர் பாஸ்கரன் நன்றி கூறினார்.

மணிகண்டம் ஒன்றியம்

இதுபோல் திருச்சி மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பாக மணிகண்டம் ஒன்றியம் நாச்சிக்குறிச்சியில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவிற்கு கிளை செயலாளர்களான செல்வம், முத்தழகு ஆகியோர் தலைமைவகித்தனர். அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மணிகண்டம் ஒன்றிய செயலாளர் தங்கவேல் கட்சிக்கொடியை ஏற்றினார். கட்சியின் மாநகர் மாவட்ட துணைச் செயலாளர் முருகன், இளைஞர் பெருமன்றத்தின் மணிகண்டம் ஒன்றிய தலைவர் உலகநாதன், குமரேசன், நல்லேந்திரன், சக்திவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே போன்று பாரதிநகரில் நடைபெற்ற விழாவில் கட்சியின் ஒன்றிய துணை செயலாளர் பாஸ்கரன் கொடியை ஏற்றிவைத்தார்.

ஊர்வலம்

மே தினவிழாவையொட்டி திருச்சி மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகில் இருந்து மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் பல்வேறு தொழிலாளர் சங்கங்கள், விவசாய சங்கங்கள் சார்பில் தொழிலாளர்கள் ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்திற்கு பாய்லர் ஆலை ஒர்க்கர்ஸ் யூனியன் உதவி தலைவர் சுந்தர்ராசு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் உத்திராபதி தொடங்கி வைத்தார். ஊர்வலம் மேலரண்சாலை, சத்திரம் பஸ் நிலையம் வழியாக சிந்தாமணி அண்ணாசிலையை அடைந்ததும் அங்கு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் செழியன், ஜீவா, சின்னத்துரை, அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்க பொது செயலாளர் பழனிசாமி ஆகியோர் பேசினார்கள். 

Next Story