வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் - பொதுமக்கள் பீதி

வேப்பனப்பள்ளி அருகே ஊருக்குள் புகுந்த காட்டு யானைகளால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
வேப்பனப்பள்ளி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள பச்சைமலை முருகன் கோவில் உள்ள வனப்பகுதியில் 13 காட்டு யானைகள் குட்டிகளுடன் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் ஆந்திர மாநில வனப்பகுதியை ஒட்டியும், வேப்பனப்பள்ளி பகுதிகளிலும் சுற்றி திரிகின்றன. இவைகள் அடிக்கடி வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள தக்காளி, பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் நாசம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் நேற்று காலை வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த 13 காட்டு யானைகள் நாடுவனப்பள்ளி கிராமத்திற்குள் புகுந்தன. அப்போது அங்குள்ள விவசாய பயிர்களை சேதப்படுத்தின.
இதைப் பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினர் அங்கு விரைந்து சென்று யானைகளை பட்டாசு வெடித்து விரட்டினர்.
இதைத் தொடர்ந்து யானைகள் தங்கள் குட்டிகளுடன் சாலையை கடந்து வனப் பகுதிக்குள் சென்று விட்டன. மீண்டும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்துவிடுமோ என்ற பீதியில் அப்பகுதி மக்கள் உள்ளனர்.

Related Tags :
Next Story