நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடக்கம்


நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க சேவை மையம் தொடக்கம்
x
தினத்தந்தி 3 May 2019 4:00 AM IST (Updated: 3 May 2019 3:03 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க மாணவ, மாணவிகளுக்கு உதவிட, நாமக்கல் அரசு பெண்கள் கல்லூரியில் சேவை மையம் தொடங்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

என்ஜினீயரிங் படிப்பில் சேர www.tne-a-o-n-l-i-ne.in, www.tndte.gov.in என்ற இணையதளங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்து உள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள் நேற்று முதல் ஆன்-லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர்.

இதையொட்டி மாணவ, மாணவிகளுக்கு உதவிட 42 சேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கலை கல்லூரியில் சேவை மையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

6 விண்ணப்பங்கள் பதிவு

இந்த மையத்திற்கு கண்காணிப்பாளர்களாக கருப்பூர் என்ஜினீயரிங் கல்லூரி பேராசிரியர் மகாதேவன், பேராசிரியை சுந்தரி ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த மையத்தில் நேற்று காலையில் விண்ணப்பங்களை பதிவு செய்யும் பணியை கல்லூரி முதல்வர் சுகுணா தொடங்கி வைத்தார். கல்லூரி பேராசிரியைகள் மாணவ, மாணவிகளுக்கு விண்ணப்பங்களை பதிவு செய்ய உதவிகளை செய்தனர்.

இந்த பணி வருகிற 31-ந் தேதி வரை தினசரி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற இருப்பதாகவும், முதல் நாளான நேற்று இந்த சேவை மையத்தில் 6 மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்ததாகவும் கல்லூரி பேராசிரியைகள் தெரிவித்தனர். 

Next Story